26 அக்டோபர், 2010

குவாம் தீவுகளில் பிரமாண்ட இராணுவத்தளம் : அமெரிக்கா நிர்மாணம்

ஐக்கிய அமெரிக்கா, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவுகளில் சுமார் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மிகப் பிரமாண்ட இராணுவ தளமொன்றினை அமைத்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி தளமானது ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பு , அணுச்சக்தி விமான தாங்கிகளுக்கான கப்பற்துறை உட்பட அதிநவீன கட்டமைப்புக்களை உள்ளடக்கவுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் இராணுவத் தளமொன்றுக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய முதலீடு இதுவாகும்.

அது மட்டுமல்ல, கடந்த காலங்களில் கடற்படை கட்டுமானங்களுக்கென செலவிடப்படவுள்ள மிகப்பெரிய தொகையும் இதுவாகும்.

எனினும் இந்நடவடிக்கை தமது சாதாரண வாழ்வினை பாதிக்கும் என குவாம் தீவு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் இராணுவ வளர்ச்சிக்குச் சவால்விடும் வகையில் இது அமையவுள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்நடவடிக்கை பசுபிக் பெருங்கடல் பகுதியில் பதற்ற நிலையை மேலும் அதிகரிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக