26 அக்டோபர், 2010

ரிஸானாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி மன்னரிடம் ஜனாதிபதி வேண்டுகோள்


சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணான ரிஸானாவுக்கான தண்டனை தொடர்பில் கருணை காட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடித மூலம் கோரியுள்ளார்.

இக்கடிதத்தை இன்று காலை சவூதி அரேபிய மன்னருக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

பணிப்பெண்ணாக சவூதி சென்றார் மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக். இவர் தனது எஜமானரின் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்கும் போது, குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

குழந்தையை ரிஸானா கொலை செய்துவிட்டதாக சம்பந்தப்பட்ட எஜமானர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரணை செய்த, சவூதியிலுள்ள தவாமி மேல் நீதிமன்றம் இவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதனை ரியாத் உயர்நீதிமன்றமும் அங்கீகரித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக