26 அக்டோபர், 2010

தாதிமாரின் தொழிற்சங்க போராட்டத்தால் ஆஸ்பத்திரி நடவடிக்கைகளில் பாதிப்பில்லை


தாதிமாரின் தொழிற்சங்கப் போராட் டத்தினால் ஆஸ்பத்திரி நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்புமில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் ரவி ருபேரூ தெரிவித்தார்.

மேற்படி போராட்டம் காரணமாக அன் றாட நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட் டதாக எந்தவொரு ஆஸ்பத்திரியிலிருந்தும் தமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என தெரிவித்த அவர், குறிப்பிடத்தக்க தொழிற்சங்கம் எதுவும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, தொழிற்சங்கப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது கோரிக் கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வருவார்க ளானால், சுகாதார அமைச்சு அதற்குத் தயாராகவுள்ளதாகவும் பதில் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்து வதால் அப்பாவி நோயாளிகளே பாதிக் கப்படுவர் என குறிப்பிட்ட அவர், போராட் டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருமாறும் அழைப்பு விடுத்தார்.

ம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க சுகாதாரத்துறை தாதிமார் சங்கம் நேற்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டம் தேவையற்றது என குறிப்பிட்ட பிரதியமைச்சர், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணியைத் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

தாதிமார் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டுள்ளோம். இது தொடர்பில் நிதியமைச்சுடனும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அரச சுகாதார தாதியர் தொழிற்சங்க இணைப்பாளர் சமன் ரத்னப்ரிய கருத்துத் தெரிவிக்கையில், முக்கியமான எட்டு கோரிக்கைகளை முன்வைத்தே நேற்றைய தினம் தாதியர் ஒரு மணி நேர சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக