26 அக்டோபர், 2010

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அரசுக்கு நஷ்டமில்லை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கை மின்சார சபைக்கோ அரசாங்கத்திற்கோ எந்தவித நஷ்டமுமில்லை. அதன் முழு பொறுப்பையும் சீன ஒப்பந்த நிறுவனமே ஏற்றுள்ளது. அதன் அடிப்படையில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் சகல பணிகளும் அடுத்த வருடம் ஜனவரிக்குள் நிறைவடையும் என்று மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மின்சார சபை இலாபநோக்கத்தை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனமல்ல. அது சேவையினை பிரதானமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனமாகும். ஆகையினால் அதனை நஷ்டத்திற்குள்ளாக்காது முன் கொண்டு செல்வதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மின் சக்தியமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பேக்ஷிதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுரைச்சோலை அனல் மின் நிøலயத்தில் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இதுவரையிலும் சேகரிக்கப்படவில்லை. அது தொடர்பான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எப்படியோ அந்த அனர்த்தத்தினக்ஷில் அரசாங்கத்திற்கோ மின்சார சபைக்கோ எந்த நஷ்டமும் இல்லை. அதாவது அந்த வேலைத் திட்டத்தை பொறுப்பேற்றிருக்கும் சீனக் கம்பனியானது இவ்வாறான அனர்த்தங்களுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுள்ளது. அதாவது அவ்வேலைத் திட்டம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தீ விபத்தை நாம் நியாயப்படுத்தவில்லை. அதனால் எமக்கு சுமையில்லை என்றே கூறுகின்றோம்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் சகல பணிகளும் அடுத்த வருடம் நிறைவு செய்யப்பட்டு தேசிய மின்சார கட்டமைப்பிற்குள் இøண்ககப்படும். அதற்கான பேச்சுவக்ஷிர்த்தைகளை சீன கம்பனியுடன் மேற்கொண்டுள்ளோம்.

சகலருக்கும் மின்சாரம் என்ற வேலைத் திட்டத்தினூடாக மின்சக்தி அமைச்சு நாடளாவிய ரீதியில் 4500 மின்சார வேலைத் திட்டங்களை ஆம்பித்துள்ளது. அதன் மூலம் 2012 ஆம் வருடத்தில் சகலரும் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மின்சார இணைப்பினை வழங்க முடியாத மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக மாற்று வழி முறைகளையும் கையாண்டு வருகின்றோம். அதாவது சூரியசக்தி, காற்றழுத்தம் போன்ற வழி முறைகளே அவையாகும். இவ்வாறான வேலைத் திட்டங்களை அண்மையில் பல கிராமங்களில் ஆரம்பித்து வைத்தோம்.

நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப மின்சக்தி துறையிலும் பல நவீன மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரவுள்ளோம். அதாவது மின்சார கட்டணங்களை எதிர்காலத்தில் பிரிபேட் காட் முறையினையும் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு வேலைத் திட்டத்தையும் சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற் கொண்டே முன்னெடுத்து வருகின்றோம். அதாவது அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரி தொடர்பிலும் கட்டுப்பாடு விதித்துள்ளோம். அங்கு தரமான நிலக்கரியே பயன்படுத்தப்படுகிறது. குறைந்த விலையிலக்ஷின தரம் குறைந்த நிலக்கரிகளை பயன்படுத்தும் போது சுற்றக்ஷிடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அநேகமான நாடுகள் இவ்வாறக்ஷின தரம் குறைந்த நிலக்கரிகளையே பயன்படுத்துகின்றன. ஆனால் நாம் சுற்றாடலை கருத்திற் கொண்டு உயர்ந்த விலையிலக்ஷின தரமான நிலைக்கரியினை பயன்படுத்தி வருகின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக