25 அக்டோபர், 2010

சுகாதார அமைச்சின் செயலருக்கு ஜனாதிபதி மஹிந்த அறிவுறுத்தல் ஆஸ்பத்திரிகளில் 24 மணிநேரமும் ஓ.பி.டி திறப்பு







நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிக ளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளு க்குத் தேவையான சிகிச்சைகள், பரிசோத னைகள் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தொற்றுநோய் உட்பட சகல நோய்களுக்கும் உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு ள்ளார். இது தொடர்பில் சகல ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் பணித்துள்ளார்.

நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற் கான முக்கிய நடவடிக்கையாக இத்திட்டம் அமைவதுடன் பல்வேறு நோய்களினால் அவஸ்தைப்படும் நோயாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாகவும் அமையும்.

அத்துடன் நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை இதன் மூலம் உறுதிப்படுத்தவும் முடியும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார, அமைச்சின் செயலாளர் 24 மணித்தியாலமும் வெளி நோயாளர் பிரிவை திறந்து வைத்து சேவைகளை வழங்கும் யோசனை ஏற்கனவே இருந்ததாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டத்தை செயற்படுத்துவதுடன் ஆரம்பத்தில் முக்கிய பெரியாஸ்பத்திரிகளில் இதனை நடைமுறைப்படுத்தவும் அடுத்த கட்டமாக அதனை சகல ஆஸ்பத்திரிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் டொக்டர்கள், மருந்தக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இந்நடவடிக்கைகள் முனைப்புப் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக