20 செப்டம்பர், 2010

கரடியனாறு பொலிஸ் நிலைய பணிகள் தற்காலிக கூடாரத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஆவணங்களும் சேகரிப்பு






மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கருகில் நிருமாணிக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரத்தில் பொலிஸாரின் பணிகள் இடம்பெறுவதாக பிராந்திய பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அழிந்த நிலையிலுள்ள கட்டட இடிபாடுகள் இயந்திரங்களின் உதவியுடன் அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அதேபோல் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஆவணங்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்த வெடிமருந்து கொள்கலன்கள் வெடித்ததனால் பொலிஸ் நிலையக் கட்டடம் முழுமையாகச் சேதமடைந்ததையடுத்து பொலிஸாரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற இவ்வெடிப்புச் சம்பவத்தில் இருபதிற்கு மேற்பட்டவர்கள் கொல் லப்பட்டதுடன் சுமார் 50 பேர் காய மடைந்தனர். இவ்வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கரடியனாறு பிரதேசம் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கரடியனாறு- ஆயித்தியமலை வீதி முச்சந்தியை அண்மித்த பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் பொலிஸ் நிலையமும் சமீபமாக விசேட அதிரடிப்படை முகாமும் அமைக்கப்பட்டன.

எனினும், 20.09.2010 விசேட அதிரடிப்படை முகாமை இலுப்படிச்சேனை முகாமுடன் இணைக் கவும் பொலிஸ் நிலையத்தை விசேட அதிரடிப் படை முகாம் அமைந்துள்ள இடத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட் டிருந்ததென பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜய் குணவர்தன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக