20 செப்டம்பர், 2010

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : த.ப.உ. சங்கம்

பஸ் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள போக்குவரத்து அமைச்சுக்கு எதிராகத் தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தனியார் பஸ் கட்டணத்தை 2 வீதமாக அதிகரிப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன் போக்குவரத்து அமைச்சுக்குச் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை, தனியார் பஸ் சேவைகளுக்கு எவ்விதமான நேர அட்டவணைகளும் போக்குவரத்து அமைச்சு வழங்கவில்லை எனவும் வாகன நெரிசல்களால் எரிபொருள் விரயமாக்கப்படுவதாகவும் எனவேதான் பஸ் கட்டணத்தை அதிகரிக்கத் தாம் கோரியதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இது குறித்து அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில்,

"என்ன காரணங்களையிட்டும், தனியார் பஸ் உரிமையாளர்கள் எந்தவித போராட்டங்களில் ஈடுபட்டாலும் கூட, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை. இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களின் கட்டணமும் வழமை போன்றே இருக்கும்" எனக் கூறியிருந்தார்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக