20 செப்டம்பர், 2010

முகாம்களிலுள்ள இளைஞர், யுவதிகள் விடுதலை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை










பொறிமுறை
யொன்றைக் கண்டறிவதாக
ஜனாதிபதி இணக்கம் எனவும் தெரிவிப்பு



முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா கிளிநொச்சியில் தெரிவித்தார்.

இதனையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களின் விடு தலை குறித்து பொறிமுறை யொன்றைக் கண்டறிய ஜனாதி பதி இணக்கம் தெரிவித்திரு ப்பதாகவும் அவர் கூறினார். சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான போதிய குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்பதை ஆராய்ந்து அவர்களை விடு தலை செய்வதற் குத் தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் பேச்சு நடத்துவதா கவும் ஆணைக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளியில் சாட்சியமளித்த பொது மக்களின் முறைப்பாடுகள் குறித்துப் பதிலளிக்கும் போதே குழுவின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நெருங்கிய உறவினர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களின் முறைப்பாடுகள் எழுத்து மூலமாகவும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

அதேநேரம், முகாம்களில் தடுத்துவைக்கப் பட்டுள்ளவர்கள், காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவின் கொழும்பு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சிய மளிக்க நேரில் வர இயலாது போனவர்கள் செயலாளர், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு, லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம், கொழும்பு-07 என்ற முகவரிக்குத் தமது முறைப் பாடுகளை அனுப்பி வைக்குமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து இராணுவத் தினரின் பகுதிகளுக்குத் தப்பி வந்த வேளை, நலன்புரி முகாம்களில் வைத்துக் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்த முகாம்களில் தடுத்து வைக் கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடு வித்துத்தர உதவுமாறும் ஆணைக்குழுவின் தலை வரிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள், இந்த ஆணைக்குழு தமக்கு நியாயம் பெற்றுத் தருமென நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரி வித்தனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் சுயமாக முன்வந்து சாட்சியமளிக்கவென சுமார் நூறு பொது மக்கள் வருகை தந்திருந்தனர். அநேகர் விதவைப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சிலைப் பள்ளியில் (பளை) தான் தீவிர மோதல் இடம்பெற்றதாகவும் இதனால், அநேகமான பெண்கள் வித வைகளாகி உள்ளதாகவும் அங்கு சாட்சி யமளித்த ஒருவர் சுட்டிக்காட்டினார். எனவே, அந்தப் பெண்களின் வாழ்வாதாரத் திற்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இங்கு சாட்சியமளித்த அநேகமான பெண்கள், தமது கணவன்மாரை விடு வித்துத் தருமாறு மன்றாட்டமாகக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளைச் செவி மடுத்த ஆணைக் குழுவின் உறுப்பினர் திருமதி மனோரி இராமநாதன் “நாங்களும் மனிதர்கள். உங்களுக்கு நன்மை பெற்றுத் தருவதற்காக எம்மால் இயன்ற அனைத்து உதவிகளை யும் செய்வோம்” என்றார்.

விசாரணைகளின் பின்னர், மீள்குடி யேற்ற கிராமங்களுக்குச் சென்ற ஆணைக் குழு வின் தலைவர் மக்களின் குறை நிறை களையும் கேட்டறிந்து கொண்டார். குழுவின் பகிரங்க விசாரணைகள் நேற்று முன்தினம் கண்டாவளை, பூநகரி ஆகிய இடங்களில் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக