29 ஜூலை, 2010

ராஜபட்ச கேட்டுக்கொண்டதாலே இந்திய பிரதிநிதி இலங்கை வருகிறார்: கெகலிய ராம்புகவெல


இலங்கை அதிபர் ராஜபட்ச கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல என்று கூறினார்.

÷தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

÷இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை

அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார்.அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று பிரதமர் தெரிவித்திருந்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு இந்திய அதிகாரி அனுப்பப்படுவது போன்று கூறப்பட்டிருந்தது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்ச தில்லி வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, இந்தியப் பிரதிநிதி இலங்கை வந்து அகதி முகாம்களை பார்வையிடுவதை இலங்கை அரசு வரவேற்கிறது என்று தெரிவித்திருந்தார். ராஜபட்சவின் வேண்டுகோளை ஏற்றே இலங்கைக்கு இந்திய பிரதிநிதி அனுப்பப்படுகிறார் என்று இலங்கை அமைச்சக செய்தித் தொடர்பாளருமான ராம்புகவெல தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக