2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து நேற்று (28) ஆலோசனை நடத்தினார்.
வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு பிரேரிக்கப்படுவதற்கு முன்னதாக ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நிவர்த்திக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஏழுபேர் கொண்ட குழுவொன்றை உடனடியாக நியமித்தார். அதேநேரம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அந்தக் குழுவைக் கேட்டுக்கொண்டார்.
அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட ஆலோச னைக் கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து அரச மற்றும் தனியார் துறை தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.
வரவு செலவுத் திட்ட யோசனைகள் மற்றும் தொழிற்சங்கப் பிணக்குகள் தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சம்பள உயர்வு தொடர்பாக ஆலோசனைகளை முன்வைத்தனர்.
அதற்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, என்னதான் சம்பள உயர்வு வழங்கினாலும் சம்பள முரண்பாடு நிலவுவதன் காரணமாக சாதகமான நிலை யைக் காண முடியாதுள்ளதென்றும், ஆகவே, முதலில் சம்பள முரண்பாட்டை நீக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கான பரிந்துரைகளை முன்வைப்பத ற்காக உடனடியாகவே குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார். மலையகப் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
பெருந்தோட்டப் பகுதிகளின் பிரச்சினைக ளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்தார். தொழிற்சங்கத் தலைவர்களிடம் ஆலோசனை பெறாமல் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில்லை என்றும் அவர்களிடம் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதியின் இந்தத் தூரநோக்குச் சிந்தனைச் செயற்பாடுகளைத் தொழிற் சங்கத் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினர். நாடு சுதந்திரமடைந்த காலப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒரு தலைவர் இருந்தால் நாட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இவர் ஜனாதிபதியாக இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டிருப்பது பெரும் பாக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்ட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக