28 ஜூலை, 2010

வரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி

அரசாங்கத்தை வரி ஏய்ப்பு செய்ய    ரூ.1 கோடியை கல்லறையில்    மறைத்து வைத்த வியாபாரிஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக தாங்கள் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் மறைத்து வருவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்த பணத்தை தனது அத்தையின் கல்லறையில் மறைத்து இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்தது வருமானவரி துறையினருக்கு தெரிய வந்தது. எனவே அந்த நபரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர் தான் வரி ஏய்ப்பு மோசடி செய்த 1 கோடி ரூபாயை தனது அத்தையின் கல்லறையில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கல்லறை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ளது.

எனவே தேவாலயத்தின் பாதிரியாரின் அனுமதி பெற்று அந்த கல்லறையை வருமானவரித்துறை இன்ஸ் பெக்டர்கள் தோண்டினர். அங்கு அவர் வரி ஏய்ப்பு செய்த பணம் இருந்தது. அத்துடன் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பு பங்கு சந்தை ஆவணங்களும் சிக்கியது.

விசாரணை நடத்தியதில் 20 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த பணத்தை அவர் கல்லறையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்வது பெரிய குற்றம். இது கண்டுபிடிக்கப்பட்டதால் கூடுதலாக அபராத பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என வருமான வரித்துறை அதிகாரி டாவ்ஹார்னெட் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக