1 ஜூலை, 2010

நிபுணர்குழு தொடர்பில் இலங்கை அதிருப்தி கொள்ளத் தேவையில்லையென ஐ.நா செயலர் தெரிவிப்பு




இலங்கை தொடர்பில் ஆலோசனை வழங்க தம்மால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழு தொடர்பில் இலங்கை அதிருப்தி கொள்ளத் தேவையில்லையென ஐ.நா செயலர் பான்கீ மூன் நேற்றுத் தெரிவித்துள்ளார். ஐ.நா செயலரால் மூன்றுபேரைக் கொண்ட நிபுணர்குழு கடந்தவாரம் அமைக்கப்பட்டது. இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூக் ஏ தருஸ்மன் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது.


எனினும் இலங்கை இக்குழுவை நிராகரித்துள்ளது. அத்துடன் குறித்த மூன்று நிபுணர்களுக்கும் இலங்கை வருவதற்கு விசாவழங்க முடியாதென்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையிலேயே நிபுணர்குழு தொடர்பில் இலங்கை அதிருப்தி கொள்ளத் தேவையில்லையென்று ஐ.நா செயலர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் தமது அர்ப்பணிப்பை வெளியிடுவதற்கு இலங்கைக்கு இதுவே சிறந்த தருணமென்றும், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய அனைவரையும் சட்டத்தின்முன் நிறுத்த இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலர் பான்கீ மூன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக