16 ஜூன், 2010

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி: தேசிய வெற்றி விழா, இராணுவ அணிவகுப்பில் முப்படை மற்றும் பொலிஸார் 9 ஆயிரம் பேர்

கொழும்பு காலி முகத்திடலில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பில் முப்படை மற்றும் பொலிஸார் ஒன்பது ஆயிரம் பேர் இம்முறை பங்கு கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

புலிகளை அல்லது பிரபாகரனை தோற்கடித்தமைக்கான கொண்டாட்டமாக அன்றி நாடு முழுவதையும் பயங்கரவாதத் திலிருந்து விடுவித்தமைக்கான கொண்டா ட்டமாக வருடந்தோறும் இதனை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத் தில் விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் விளக்கமளிக்கையில்:- பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த அணிவகுப்பின்போது வழமையை விட வித்தியாசமான முறையில் முப்படையினரும் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளனர்.

தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும், அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு படை வீரர்களின் தேசிய நினைவுதின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வழக்கமான அணிவகுப்புக்கு மேலதிகமாக இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் கலந்து கொண்ட பெரும்பாலான படை வீரர்கள் முதற் தடவையாக பங்கு கொண்டு பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பில் செயல் முறையில் காண்பிக்கவுள்ளதுடன் அதற்காக பயன்படுத்திய கனரக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களையும் கொண்டுவரவுள்ளனர்.

கடற்படை அணிவகுப்பு ஆயிரம் கடற் படையினர் பங்குபற்றவுள்ளதுடன் இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட அதிவேக டோராக்கள், தாக்குதல் படகுகள், கடற்படை கப்பல்களினதும் சாகசங்களை காலி முகத்திடல் கடலில் காண்பிக்கவுள்ளனர்.

விமானப் படை அணிவகுப்பு 1400 விமானப் படை வீரர்கள் பங்கு பற்றவுள்ளதுடன் கபீர், எம். ஐ. – 27 உட்பட தாக்குதல் விமானங்கள் வான்பரப்பில் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக