நித்யானந்தா சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பது போன்று வெளியான வீடியோ படம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கர்நாடகா,போலீசார் கைது செய்தனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். 51 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
நித்யானந்தா வழக்கில் ரஞ்சிதாவின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அவரை போலீசார் வலைவீசி தேடினர். சென்னை தியாகராயநகரில் ரஞ்சிதாவுக்கு வீடு உள்ளது. அங்கும் தேடி வந்தனர். ஆனால் அவ்வீடு ஆபாச சி.டி வெளியானதில் இருந்து பூட்டியே கிடக்கிறது. கேரளா, ஐதராபாத், பகுதிகளிலும் ரஞ்சிதாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. போலீசில் ஆஜராகும்படி அவரது வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனாலும் வரவில்லை.
இதையடுத்து அவரை கைது செய்வதற்காக கோர்ட்டில் ஆர்டர் வாங்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தந்தை வீட்டில் ரஞ்சிதா இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. நித்யானந்தாவை கைது செய்த உடனேயே அமெரிக்காவுக்கு தப்பிச்சென்று விட்டாராம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று இருவருமே ஆரம் பத்தில் மறுத்தனர். ஆனால் தடய அறிவியல் சோதனைகளில் அந்த வீடியோ காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்று பயந்து ரஞ்சிதா அமெரிக்காவுக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு ரஞ்சிதா கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனக்கு உடல் நிலை பாதிக்து கப்பட்டுள்ளது என்றும் எனவே விசாரணைக்கு வர இயலாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
ரஞ்சிதாவிடம் வாக்கு மூலம் பெற்று நித்யானந்தாவுக்கு கிடுக்கிபிடி போட போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இந்த கடிதத்தால் அது நிறைவேறாமல் போனது. நித்யானந்தா ஆதரவாளர்களும் ரஞ்சிதா போலீசில் சிக்காமல் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். வழக்கு முடியும் வரை அவர் தலைமறைவாகவே இருப்பார் என கூறப்படுகிறது.
ஆனாலும் ரஞ்சிதா வருகையை எதிர்பார்த்து விமான நிலையங்களில் ரகசிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயிலில் இருந்து வந்த நித்யானந்தாவுக்கு கோர்ட்டு ஆசிரமத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் ஆன்மீக வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளது. தற்போது அவர் பிடதி ஆசிரமத்தில் பஞ்சத பஸ்தா யாகம் நடத்தி வருகிறார். வட்ட வடிவில் குழி வெட்டி அதில் சுள்ளிகளை போட்டு நெருப்பை எரிய வைத்து நடுவில் உட்கார்ந்து தியானம் செய்கிறார்.
காலை 2 மணி நேரமும் மாலை 2 மணிநேரமும் இந்த தியானத்தை செய்கிறார். இந்த தியானம் வட இந்தியாவில் மிகவும் பிரசித்தமானது ஆகும். உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் இந்த தியானம் மூலம் வெளியேற்றப்பட்டு மனம் திடமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக