16 ஜூன், 2010

கிளிநொச்சி மாவட்டம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நாளை வைபவ ரீதியாக ஆரம்பம்


வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நாளை 17ம் திகதி வைபவ நீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஆஸ்பத்திரி கட்டிடத் தொகுதி, இரண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், தொழிற் பயிற்சி மத்திய நிலையம், இலங்கை மின்சார சபையின் அலுவலகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அலுவலகம், கணனி மத்திய நிலையம் ஆகியன திறந்து வைக்கப்பட விருக்கின்றன. அதேநேரம் இ. போ. சபையின் மூன்று புதிய பஸ் சேவைகள், நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் என்பனவும் தொடக்கி வைக்கப்படவுள்ளன. 60 விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட வுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக கண்காட்சி கால்பந்தாட்டப் போட்டியும், கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. இவ்வைபவங்களில் அமைச்சர்களும், இளைஞருக்கான நாளை அமைப்பின் தலைவரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. யுமான நாமல் ராஜபக்ஷ உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக