5 ஜூன், 2010

முல்லைத்தீவில் 170 குடும்பங்களை சேர்ந்த 529 பேர் 4 பி.செ. பிரிவுகளில் மீள்குடியேற்றம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 170 குடும்பங்களைச் சேர்ந்த 529 பேர் நேற்று (4) கரைந்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 4 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக திட்டப்பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

இவர்கள் முள்ளியவளை வடக்கு, தண்ணீர்ஊற்று மேற்கு, செல்வபுரம், மற்றும் புடரிகுடா ஆகிய பகுதிகளில் நேற்று மீள்குடியேற்றப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித் தார்.

இதேவேளை, முள்ளிய வளைவடக்கு மற்றும் ஒட்டுச்சுட்டான் பகுதிகளில் அடுத்த வாரம் ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள தமது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, கடந்த இரண்டாம் திகதி 1218 பேர் 17 கிராம சேவகர் பிரிவில் மீள்குடியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக