5 ஜூன், 2010

மலையகப் பகுதி எல்லை மீள்நிர்ணயம்; திருத்தங்களுடன் மற்றொரு அறிக்கை சமர்ப்பிக்க இ. தொ. கா. தீர்மானம்

மலையகப் பகுதிகளில் பொது நிர்வாகக் கட்டமைப்பின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் மக்களுடன் ஆராய்ந்து முழுமையான திருத்தங்களுடன் மற்றுமொரு அறிக்கையைச் சமர்ப்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு மக்களின் கருத்துக்களையும் புத்தி ஜீவிகளின் யோசனைகளையும் பெற்று வருகின்றது. அந்தப் பணிகள் நிறைவ டைந்ததும் முழுமையான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படுமென காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் “தினகரனு”க்குத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்திற்கான யோசனை வரைவு எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை மாவட்டங்கள் தொடர்பான முழுமையான யோசனைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இதற்கான கால அவகாசத்தை ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பு திருத்தத்தினூடாகத் தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதற்கான ஏற்பாடுகள்

முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மலையகத்தில் வாக் காளர் இடாப்புகளைத் திருத்தும் விடயத்தில் இ. தொ. கா. கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மக்களிடம் இது தொடர்பில் தெளிவை ஏற்படுத்தவும், வாக்காளர் இடாப்பில் ஒவ்வொரு மாவட் டத்திலும், பெயர்களை பதிய வேண்டும் என்பதிலும் தீவிர கவனத்தைச் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட ரீதியாகக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, இ. தொ. கா. வளர்ச்சியில் பங்காற்றும் மாநில மாவட்ட பிரதிநிதிகள், மகளிர் இணைப்பதிகாரிகள், அரசியல் அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆகியோருக்கு இக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஐந்தாம் திகதி கொட் டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கேட்போர் கூடத்திலும் நாளை ஆறாந் திகதி பதுளை கலாசார மண்டபத்திலும், 8 ஆம் திகதி கொழும்பு செளமிய பவனிலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இக் கூட்டங்களில் இ. தொ. கா. தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா. மாரிமுத்து, நிர்வாக செயலாளர் எம். சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக