12 மே, 2010

கிளிநொச்சியின் 5 பிரதேசங்களில் 1838 பேர் நேற்று மீள்குடியேற்றம் முல்லையில் இன்று 479 பேர் குடியேற்றம்

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 578 குடும்பங்களைச் சேர்ந்த 1838 பேர் நேற்று (11) கிளிநொச்சி மாவட்டத்தின் 5 பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் கூறியது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் இன்று (12) 155 குடும்பங்களைச் சேர்ந்த 479 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமல்டா சுகுமார் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னேரிக்குளம் அக்கராயன், கந்தபுரம், கண்ணகிபுரம் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளிலே நேற்று 1838 பேர் மீள் குடியேற்றப்பட்டனர். இவர்கள் செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்திலிருந்து விசேட பஸ்கள் மூலம் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இன்று (12) முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டிச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 18 கிராமசேவகர் பிரிவுகளில 479 பேர் மீள்குடியேற்றப்படுகின்றனர்.

இதேவேளை சுமார் 35 ஆயிரம் பேரே தற்பொழுது வவுனியா நிவாரணக் கிராமங்களில் மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் கூறியது. சுமார் 30 ஆயிரம் பேர் உறவினர்களுடன் தங்கியுள்ளனர். இவர்களும் துரிதமாக மீள்குடியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக