வவுனியா நகர சபைக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் தற்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
150 குடும்பங்களைச் சேர்ந்த 486 குடும்பங்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதேவேளை, இவர்கள் அனைவரும் முதலில் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் 3 நாட்கள் தங்க வைக்கப்படுவர். பின்னர், வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதும் அவர்களது சொந்த இடங்களில், மீள் குடியேற்றப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட, ஒட்டுசுட்டான் அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இவர்களுக்கான மேலதிக வசதிகளை அரசு சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, மரக்காரம்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த 11,999 குடும்பங்களின் 33,636 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக