12 மே, 2010

மத்திய மாகாண சபையில் ஐ.தே.க பிளவுபடும் நிலை தலைமை மீது உறுப்பினர்கள் சீற்றம்

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் புதிய தலையிடி உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக கே. கே. பியதாசவை ரணில் விக்கிரமசிங்க நியமித்தமைக்கு எதிராக மத்திய மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், ஏற்பட்டுள்ள நிலைமையைச் சமாளிக்க முடியாமல் ரணில் விக்கிரமசிங்க திடீரென வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர்களை கொழும்பு சிறிகொத்தா தலைமையகத்திற்கு வருமாறு அழைத்துவிட்டு அவர் வெளிநாடு பயணமாகி விட்டதால், கட்சி அங்கத்தவர்கள் மத்தியிலும், மாகாண சபை உறுப்பினர்களுக் கிடையிலும் கடும் அதிருப்தியான நிலை உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கி ன்றன. இவ்வாறான ஒருவரை எவ்வாறு தலைவராக ஏற்றுக் கொள்வது என்ற நிலை மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும், பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் இப்பிரச்சினையை சமரசப்படுத்த மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. பியதாசவை தலைவராக நியமித்ததாகவும் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு இவர்கள் கோரியதோடு தலைவரின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இழுபறி நிலை மத்திய மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் என்றும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன. ஐ. தே. க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மாகாண சபை உறுப்பினர் கே. கே. பியதாசவை நியமித்த போதிலும் அதனை மாகாண சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்தே இந்த இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் மத்திய மாகாண சபைக்கு எதிர்க்கட்சி தலை வரை மாகாண சபையின் தலைவரே சிபார்சு செய்து ஏற்றுக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரி விக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக