25 ஏப்ரல், 2010

செல்போன் பறிமுதல் வழக்கு: நளினிக்கு முருகன் ஆறுதல்







வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு, செல்போன் பறிமுதல் வழக்கு பற்றி அவரது கணவர் முருகன் சனிக்கிழமை ஆறுதல் கூறியதாக, நளினியின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் 15 நாள்களுக்கு ஒரு முறை சந்தித்து பேச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இவ்விருவரும் சனிக்கிழமை சந்தித்துக் கொள்ள சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதையடுத்து, ஆண்கள் சிறையிலிருந்து முருகனை வேலூர் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கருணாகரன் தலைமையிலான போலீஸக்ஷ்ர் பலத்த பாதுகாப்போடு பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முருகனும் நளினியும் சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு முருகன் மீண்டும் ஆண்கள் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து வழக்குரைஞர் புகழேந்தி கூறியது:

"நளினியை சனிக்கிழமை சந்தித்து பேசிய கணவர் முருகன், வழக்கை சட்டப்படி சந்திக்கலாம் என ஆறுதல் கூறினார். மேலும், நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், வழக்குரைஞர்களையும் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது' என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக