25 ஏப்ரல், 2010

ஈரான் சிறையிலிருக்கும் அமெரிக்கர் மூவரை விடுவிக்க வலியுறுத்தல்





ஈரானால் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கர்களை உடனடியாக அந்நாட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இது குறித்து அவர்கள் மீது முறையான குற்றச்சாட்டு எதையும் ஈரான் அரசு பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் உடல் நிலை பாதிப்படைந்து வருகிறது.

எனவே, அவர்கள் மூவரையும் விடுவித்து, சொந்த நாட்டுக்கு அவர்கள் திரும்புவதற்கு ஈரான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக