25 ஏப்ரல், 2010

நளினிக்கு, 'சிம்கார்டு' கொடுத்தது யார்? நீடிக்கிறது குழப்பம்






வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில் நளினிக்கு, 'சிம் கார்டு' கிடைத்த விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. காட்பாடி தாலுகா, கனகசமுத்திரம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமானது இந்த, 'சிம் கார்டு' என்று தெரிந்ததும், அங்கு, பாகாயம் போலீசார் வலை வீசி தேடினர்.

எட்டு பேர், ரவி என்ற பெயரில் இருந்ததால், கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இறுதியில் தொண்டான் துளசி கூட்டுரோடில், லோடு வாகன உரிமையாளர் ரவி என்பவரின், 'சிம்கார்டு' என தெரிந்தது. அவர், தனக்குத் தெரிந்த பத்மா என்ற பெண்ணிடம் அதைக் கொடுத்ததாகக் கூறினார். பத்மாவிடம் விசாரித்தபோது, அந்த, 'சிம்கார்டு' போட்டதும், ஒரே ஒரு நாள் பயன்படுத்திய பிறகு, மொபைல் போனே தொலைந்து விட்டது என்று கூறினார். இதையடுத்து, நளினிக்கு அந்த, 'சிம் கார்டை' யார் கொடுத்தனர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக