12 ஏப்ரல், 2010

மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு

மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பெருமளவில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தன.

புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர் பிரசாத் அபேசிங்க இதனை எமக்கு உறுதிப்படுத்தினார்.

"அரச நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக நன்கொடைகளைக் கொண்டே மருந்துகளை வாங்கி வருகிறோம். நன்கொடை கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம். சில மருந்துகளை அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கின்றது.

அதிக விலையான மருந்துகள் தேவைப்படும் நோயாளர்களுக்கு அதற்கு மாற்றீடான மருந்துகளையே வழங்கி வருகிறோம். முடியுமானவரை சத்திர சிகிச்சைகளையும் செய்துவருகிறோம்" என பிரசாத் அபேசிங்க எமக்குத் தெரிவித்தார்.

நோய்க்குரிய மருந்துகள் கிடைக்கப் பெறாததால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக