20 மார்ச், 2010

இங்கிலாந்தில் ஏயார்வேஸ் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்




இங்கிலாந்தில் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவன விமானிகள் சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே 3 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அவர்கள் தொடங்கினார்கள்.

டெல் அவில் நகரில் இருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்குக் கடைசியாக வந்த விமானத்துடன் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்துக்கு 1950 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.

தற்போது விமானிகள் வேலை நிறுத்தம் செய்வதன் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கிடையே, பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி வில்லி வால்ஷ் பயணிகளிடம் வீடியோ மூலம் இன்டர்நெட்டில் மன்னிப்பு கேட்டுள்ளார். விமான சேவைகள் தடைபடாமல் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"முடிந்தவரை எங்களின் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் விமானங்களை இயக்கவும் முயற்சி செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக