'பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டுமெனில், சமையலறையில் சிறிது நேரமாவது வேலை செய்ய வேண்டும்' என, தனது கட்சி எம்.பி.,க்களுக்கு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் அடுத்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், பெண்களுக்கான சிறப்பு தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்படுவோர், பெண்களுக்கு உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ள வேண்டும். சமையலறையில் சிறிது நேரமாவது வேலை செய்தால் தான், பெண்களின் பிரச்னையை எம்.பி.,க்கள் புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக