20 மார்ச், 2010

மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எமது ஆட்சி மலர்ந்த பின் வித்திடுவோம்: யாழில் எதிர்க்கட்சித் தலைவர்






எதிர்வரும் புதுவருடத்தின் பின்னர் எமது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே ஆட்சியில் இருக்கும். அதன் பின்னர் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும். நீங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எமது ஆட்சியின்போது ஆவன செய்வோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புவடக்கில் இராணுவத்தினர் மட்டுமே ஆயுதம் ஏந்தியிருக்க அனுமதிக்கப்படுவார்கள். அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ள மக்கள் குடியிருப்புகளிலிருந்து அவை அகற்றப்படும்.

யுத்தகாலத்தில் காணாமல்போன, கடத்தப்பட்டோர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கும் நாம் திட்டம் வகுத்துள்ளோம்பூ என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக