20 மார்ச், 2010

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் வற்றாப்பளைக்கு விஜயம்-(புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)


(2010-03-19 23:59:40)

நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் இன்று தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அண்மையில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முல்லைத்தீவு, வற்றாப்பளைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது புளொட் பிரதிநிதிகள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கேட்டறிந்து கொண்டனர். மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளில் சிலவற்றைத் தவிர அனைத்து வீடுகளுமே யுத்தம் காரணமாக உடைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. தமது வீட்டு வசதியின்மை தொடர்பிலும் இதன்போது அம்மக்கள் புளொட் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் அமைப்பாளர் சிவநேசன் பவன் ஆகியோர், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள், அவர்களின் மீள்குடியேற்றம், போக்குவரத்து கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு இத்தேர்தலின்போது மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.


நேற்றைய மன்னார்-அடம்பன் விஜயத்தின்போது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக