12 டிசம்பர், 2010

நாவலப்பிட்டியில் 12 அடி நீளமான பாம்பு
நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய மேற்பிரிவு தோட்டத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்றினை தோட்ட மக்கள் பிடித்துள்ளனர்.

இந்தத் தோட்டத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றவர்களில் ஒருவரான மோசஸ் என்ற இளைஞன் இந்த மலைப்பாம்பினை உயிருடன் பிடித்துத் தோட்டத்திற்கு நேற்று கொண்டு வந்துள்ளார்.

இந்த மலைப்பாம்பினை சல்லடை பெட்டி ஒன்றில் பாதுகாப்பாக வைத்துள்ள இவர் இந்த மலைப்பாம்பினை வன இலாகா பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மலைப்பாம்பினை பார்ப்பதில் பிரதேச மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இம்புல்பிட்டிய காட்டுப்பகுதியில் மலைப்பாம்புகளின் ஊடுறுவல் அதிகமாகவுள்ளதால் தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் அச்சத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக