13 டிசம்பர், 2010

இலங்கை நிர்வாக சேவைக்கு மேலும் 130 அதிகாரிகள் புதனன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்



அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் இலங்கை நிர்வாக சேவைக்கு மேலும் புதிதாக 130 அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நாளை மறுதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியிடமிருந்து புதிய நிர்வாக சேவை அதிகாரிகள் தமக்கான நியமனக் கடிதங்க ளைப் பெற்றுக் கொள்வரென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதற்கான எற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவி த்தார்.

இதேவேளை, அண்மையில் அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தபோது; இது விடயமாக அவர்களுடன் கலந்துரை யாடினார். இதன்போது முக்கிய விடயமொன்றையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இளம் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு சேவைக்கான அனுபவம் போதாது எனக் காரணம் காட்டி ஏற்கனவே பதவியிலிருப்போர் 55 வயது க்குப் பின்னரும் தமது பதவிக் காலத்தைத் தொடரும் நிலை உள்ளது. இனி இத்தகைய நீடிப்புக்கு இடமில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது விடயத்தில் அமைச்சின் செயலாளர்கள் தமது கவனத்தைச் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இளம் உத்தியோகத்தர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை தவறவிட இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் தெரிவிக்கையில்; ஏற்கனவே 55 வயதை எட்டியவர்கள் தமது சேவைக்காலத்தில் பெற்றுக்கொள்ளாத விடுமுறையைக் காரணங்காட்டியும் தமது சேவையை நீடித்துக்கொள்ள முனை கின்றனர். அத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றார்.

இலங்கை நிர்வாக சேவை ஆட்சேர்ப் புக்காக கடந்த வருடத்தில் திறந்த போட் டிப் பரீட்சை நடத்தப்பட்டதுடன் சுமார் 20,000 பேர் இப்பரீட்சைக்கு தோன்றினர். இப்பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்ற வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான வாய்மூல பரீட்சையொன்றும் நடத்தப்பட்டது.

இப்பரீட்சையிலிருந்தே 130 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர் என அரச சேவை இணைந்த சேவைகள் பணிப்பாளர் பிரசாத் பியசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி விக்கையில், வருடாந்தம் ஓய்வுபெறுவோர் வெவ்வேறு காரணங்களுக்காக பதவி விலகுவோர் ஆகியன கருத்திற்கொள் ளப்பட்டே வெற்றிடங்களுக்கேற்ப நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றன. 2009ம் வருடத்தில் நடத்தப்பட்ட பரீட் சைக்கிணங்கவே மேற்படி 130 பேருக்கு நியமனம் வழங்கப்படுவதுடன் 2010ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக