14 டிசம்பர், 2010

அந்தார்ட்டிகாவில் மூழ்கியது கொரியக் கப்பல்: 5 பேர் பலி - 15 பேர் மாயம்

கொரிய நாட்டிற்கு சொந்தமான கப்பல் ஒன்று அந்தார்ட்டிகா கடல் பகுதியில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த 20 மாலுமிகளுள் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 15 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் இரண்டு தென்கொரியக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருவதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக