நாடெங்கிலும் புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என் 1) வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் நோய் பரவல் தடுப்புப் பிரிவின் பிரதம மருத்துவ நிபுணர் சுதத் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.
தடிமன், இருமல் மற்றும் கடும் காய்ச்சல், உடல் வலி போன்றவாறான அறிகுறிகள் தென்பட்டால் தாமதியாது அரசாங்க மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) வைரஸ் நோய் நாட்டின் பல பிரதேசங்களிலும் பரவியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையும் 242 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது நாடெங்கிலும் பரவியுள்ள இந்நோய்க்கு 1-10 வயதுக்கும், 21-30 வயதுக்கும் இடைப்பட்டோரே பெரிதும் உள்ளாகியுள்ளனர். இந்நோய் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை உட்பட சகல மாவட்டங்களிலும் பரவி இருந்தாலும் கொழும்பு மாவட்டத்திலேயே இந்நோய்க்கு அதிகளவிலானோர் உள்ளாகி இருக்கின்றனர்.
அதேவேளை, புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என் 1) வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளுவதற்கு ஏற்றவகையில் நாள்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்தமா, நீரிழிவு நோய்கள், சிறுநீரக நோய்கள் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்றவாறான நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர் ணீகளுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றன. அரசாங்க ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் அலு வலகங்கள் ஊடாக இத்தடுப்பு வழங் கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கென 15 லட்சம் தடுப்பு மருந்து தருவிக்கப் பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக