5 அக்டோபர், 2010

அரசின் செயற்பாடு சர்வாதிகார ஆட்சியை வெளிப்படுத்துகின்றது : ஐ.தே.க



தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளானது சர்வாதிகார ஆட்சியை தெளிவுப்படுத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டி காட்டியுள்ளது.

முதலாவதாக அரசியல் சீர்திருத்தத்தில் அதிகார பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியமை, முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு 30 மாதம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளமை, இன்று நள்ளிரவு முதல் மாவின் விலையை அதிகரிக்க எடுத்துள்ள தீர்மானம் போன்றவை அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தை தெளிவுப்படுத்துகின்றது என கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கயந்த, "அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். அதேவேளை, பொன்சேகா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். பயங்கரவாதத்தை வெற்றிக் கொண்டவருக்கு சிறை. நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பயங்கரவாத அமைப்போடு தொடர்புபட்டவர்களுக்கு சொகுசு வாழ்க்கை. எனவே ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளது"எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக