7 செப்டம்பர், 2010

அமைதிப்படை நினைவிடத்தில் இந்திய ராணுவ தளபதி அஞ்சலி





கொழும்பு : இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங், அங்குள்ள இந்திய அமைதிப் படையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங், ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கடந்த 1987ல் இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் பணியாற்றி, உயிர் நீத்த 1,165 இந்திய வீரர்களின் நினைவாக, கொழும்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இங்கு சென்ற ராணுவ தளபதி வி.கே.சிங் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் அவர், இந்திய அமைதிப் படையில் தானும் பணியாற்றியதாகவும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்திய வீரர்கள் பாடுபட்டதாகவும் குறிப்பிட்டார். இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா உள்ளிட்டோரும், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பிரதமர் ஜெயரத்னே, ராணுவ செயலர் கோத்தபயா ராஜபக்ஷே, வெளியுறவு அமைச்சர் பெரிஸ் உள்ளிட்டோரையும், ராணுவ தளபதி வி.கே.சிங், சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக