7 செப்டம்பர், 2010

வடக்கு, கிழக்கு மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பது அரச அதிபர்களின் பொறுப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் மக்களின் தேவைகள் குறைபாடுகளை இனங்கண்டு இதனைத் தீர்த்து வைப்பது அரசாங்க அதிபர்களினது பொறுப் பாகுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான நாடளாவிய மாவட்டச் செயலாளர்களின் மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் புதிய சிந்தனை, வினைத் திறமையுடனான செயற்பாடுகள் மூலமே சிறந்த அரச நிர்வாகத்தைக் கட்டியெ ழுப்ப முடியுமென குறிப் பிட்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செயற் பட்டதாலேயே பல வெற்றிகளைச் சந்திக்க முடிந் துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர்களின் மாநாடு முதற்தடவையாக இம்முறை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்றும் ஆரம்பமாகி இரண்டு நாள் நிகழ்வாக இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர். அமைச்சர் ஜோன் செனவிரத்ன மேலும் தெரிவிக்கையில்,

புதிய சிந்தனையூடான செயற்பாடுகள் பல வெற்றிகளை ஈட்டுவதற்கு வழிவகுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகளுடன் சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளமைக்கும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும் புதிய சிந்தனையே உறுதுணையாக அமைந்துள்ளது, மாவட்டச் செயலாளர்கள் இதனைத் தம் செயற்பாடுகளில் மேற்கொள்ளும் போது சிறந்த அரச நிர்வாகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர்கள் மாநாட்டைய டுத்து பிரதேச செயலாளர்களுக்கான மாநாடும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவு ள்ளது. இதற்கென நாடளாவிய பிரதேச செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக