7 செப்டம்பர், 2010

வட.கிழ. மக்களின் மேம்பாட்டுக்கு இந்தியா உதவும் : இந்திய இராணுவத் தளபதி உறுதி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் சமூக மேம்பாட்டுக்கு இந்தியா கூடிய கவனம் செலுத்தும் என்று இந்திய இராணுவத்தளபதி விஜயகுமார் சிங் பிரதமர் டீ.எம். ஜயரத்னாவிடம் உறுதியளித்தார்.

இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று காலை பிரதமர் டீ.எம். ஜயரத்னவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

அங்கு கருத்து தெரிவித்த இந்திய இராணுவத்தளபதி விஜயகுமார் சிங்,

"யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாட்டுக்கு இந்தியா கூடிய கவனம் செலுத்தும். அம்மக்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை முன்னெடுக்க அரசுக்கு தற்போது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்றார்.

பிரதமர் டீ.எம். ஜயரத்ன, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இந்திய அரசின் உதவியுடன் துரித நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக