7 செப்டம்பர், 2010

மக்களின் சுயாதிபத்தியத்துக்கும் ஜனநாயகத்துக்கும் 18வது திருத்தம்




நாட்டு மக்களின் சுயாதிபத்தியத்தை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியொருவர் இரண்டாவது பதவிக் காலத்தில் சர்வாதிகாரியாக செயற்படுவதைத் தவிர்ப் பதற்கும் அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் வழிவகுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமையாளர்கள், பத்திரி கைகளின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திர னியல் ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கி யுள்ளது. ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவர் மூன்றாவது தடவையும் அப்பதவியை வகிக்க வேண்டுமென மக்கள் விரும்பினால் அதற்கு அரசியலமைப்பு தடையாக இருப்பது நாட்டு மக்களின் சுயாதிபத்தியத்தை நிராகரிப் பதாகிவிடும்.

அதேநேரம், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் தான் வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருப்பதால் ஜனாதிபதியொருவர் இரண்டாவது பதவிக் காலத்தில் சர்வாதிகாரி போன்று செயற்பட லாம். ஏனெனில் அவர் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லா திருப்பதினாலாகும். இக் குறைபாடுகளை அரசியலமைப் புக்கான 18வது திருத்தம் நிவர்த் திப்பதாக அமைந்திருக்கின்றது.

அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் தொடர்பாக மஹிந்த சிந்தனை தொலை நோக்கில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இத் திருத்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியினருடன் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகளின் போது தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அவர்கள் அச்சமயம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இத்திருத்தம் தொடர்பாக பொதுமக்களும் ஊடகங்களும் கடந்த மூன்று மாதங்களாகக் கலந்துரையாடி வருகின்றன.

அதனால் அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் மக்களின் சுயாதிபத்தியத்தை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதியொருவர் இரண்டாவது பதவிக் காலத்தில் சர்வா திகாரி போன்று செயற்படுவதை தவிர்ப்ப தையும் அடிப்படையாகக் கொண்டிருக் கின்றது.

இதேநேரம் அரசியலமைப்புக்கான 17வது திருத்தம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும். அதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. அத்திருத் தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அரசியல் வாதிகளால்தான் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

அதனால் அப்பிரதிநிதிகளும் அரசியல் கட்சி சார்பானவர்களாகவே செயற்பட்டனர். அவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கவில்லை.

எதிர்க்கட்சியினர் 17வது திருத்தம் குறித்து குரல் எழுப்புகின்றனர். ஆனால் அவர்கள் இத்திருத்தத்தின் கீழான அரசியலமைப்புச் சபைக்குத் தங்களது பிரதிநிதிகளை சிபார்சு செய்யாததால் தான் அச்சபை நீண்ட காலமாக இயங்கவில்லை. அரசியலமைப்புக்கான 17வது திருத்தத்தைத் திருத்துமாறு 143 எம்.பிக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களில் ஐ.தே.க. எம்.பிக்களும் அடங்கியுள்ளனர். பாராளுமன்றம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனமாகும். ஆயினும் தற்போதைய 17வது திருத்தம் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை வெளியிலுள்ளவர்களுக்கு கையளிப்பதாக உள்ளது.

இதற்கு இடமளிக்க முடியாது. அதனால் தான் புதிய திருத்தம் பாராளுமன்ற சபையாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர்களையே அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும். இது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபையாகும். பாராளுமன்றத்திற்கு வகை சொல்லும் ஸ்தாபனமாகவும் திகழும்.

தற்போதைய 17வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கு ஒரு கட்சி அதன் உறுப்பினரை நியமிக்காவிட்டால் அச்சபை இயங்க முடியாது.

ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ் அவ்வாறு நியமிக்காவிட்டாலும் பாராளுமன்ற சபையைத் தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்வில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘நான் சந்தித்த புத்திஜீவிகள் சகலரும் இத்திருத்தத்தை வர வேற்கின்றார்கள்.

அதனால் இத்திருத்தத்தை எந்த நிலையிலும் வாபஸ் பெற வேண்டிய தேவை ஏற்படாது என்றும் குறிப்பிட் டார்.

இச்சந்திப்பின் போது அமைச்சர் களான மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா, கெஹலிய ரம்புக்வெல்ல, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக