7 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தம் நிறைவேறியதும் எதிர்க் கட்சிகளின் கோஷம் மறைந்துவிடும்

மக்கள் ஆதரவு எமக்கு உண்டு என்கிறார் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தைப் பிடிக்காத சில அரசியல் கட்சிகளும் வெளிநாட்டு சக்திகளும் அரச சார்பற்ற நிறுவனங்களுமே அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக கோசமெழுப்பி வருகின்றன. அரசியல மைப்புத் திருத்தத்தின் ஊடாக சர்வாதிகார ஆட்சியே உருவாகுமென எதிர்க் கட்சியினர் கூறுவது அர்த்தமற்ற வெறும் கோஷம் மட்டுமே ஆகும் என்று ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், 18ஆவது திருத்தம் மூலம் மக்களின் இறைமை மேலும் உறுதிப்படுத் தப்படும் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர் தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியாது என்பதை பிரதான எதிர்க் கட்சியும் சில அரசியல் கட்சிகளும் இப்பொழுதே ஏற்றுக்கொண்டுள்ளன.

எமக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள நிலையில் யாப்புத் திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு கிடையாது என சில அரசியல்வாதிகள் கூறுவது நகைப்புக்குரியதாகும். இவ்வாறு குற்றச்சாட்டு கூறுபவர்களால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லக்கூட முடியவில்லை. ஐ.தே.க வுக்குள் ஏற்பட்டுள்ள கடும் பிளவு காரணமாக ஐ. தே. க எம்.பிக்கள் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். மூன்றில் இரண்டை விட அதிக பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் ஐ.தே.க வினதும் எதிர்க் கட்சிகளினதும் கோசங்கள் காணாமல் போய்விடும்.

ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கோரிய எதிர்க் கட்சிக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 40 வீதவாக்குகளும் அதற்கு எதிராக 58 வீத வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பலமான ஆட்சியினூடாக துரித அபிவிருத்தி ஏற்படவேண்டும் என்பதே மக்களின் அபிலாஷையாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இந்த யாப்புத் திருத்தத்தினூடாக வழியமைக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக