28 ஆகஸ்ட், 2010

வன்னி மாவட்ட பட்டதாரிகள் 30 பேருக்கு நேற்று அரச நியமனம் றிஷாட், சந்திரசிறியால் வழங்கி வைப்புவன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 30 பட்டதாரிகளுக்கு நேற்று சிறுவர் நன் னடத்தை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கைத்தொழில் வாணிப அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, ஹுசைன் பாரூக் எம்.பி., ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

வட மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் றிஷாட் பதியுதீன் எடுத்துக் கொண்ட துரித முயற்சி யின் பலனாக, வட மாகாண ஆளுநரின் அனுசரணையின் கீழ் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இன, மத பேதம் துறந்து, சமத்துவமாக சகலரும் வாழ வேண்டும் என்ற ஜனாதி பதியின் உறுதியான நிலைப்பாட்டை முன்னெடுக்க நாம் அனைவரும் அணி திரள வேண்டு மென அமைச்சர் றிஷாட் நிகழ்வில் உரையாற்றும்போது கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக