சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விரைவில் வீடுகளை நிர்மாணித்து குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இவர்களுக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சம்பூரில் வீடுகளை நிர்மாணித்து வழங்க முடியாது போனால் அதற்கு அயலிலுள்ள பிரதேசமொன்றிலாவது அம் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படு மெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த நான்கு வருட காலமாக சம்பூரிலிருந்து இவ்வாறு 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்கின்றன என தெரிவித்த அமைச்சர், நேற்று முன்தினம் தாமும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் நேரில் சென்று அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சி னைகள் சம்பந்தமாக ஆராய்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
இறுதிக்கட்ட யுத்தத்தில்பாதிக்கப் பட்டவர்கள் சம்பந்தமாகவே பலரது கவனமும் உள்ளது. எனினும் அதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கும் தீர்வு பெற்றுக் கொடுப்பதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் சம்பூர் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக