14 ஜூன், 2010

இலங்கை நிலவரத்தில் அமெ.-இந்தியா ஒரே கருத்து : ரொபர்ட் ஓ பிளேக்


அமெரிக்கா, இந்தியா நாடுகள் இலங்கை நிலவரம் குறித்து ஒரே பார்வையைக் கொண்டுள்ளதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க பிரதிச் செயலாளர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ரிடிப் ( ஐடூக்ஷடுஹ'ஙூ தடீக்ஷடுக்க் ) இணையத்தளத்திற்கு அவர் அளித்த பிரத்தியேக போட்டியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 40, 000 மக்களை குடியமர்த்துவது தொடர்பில் அமெரிக்கா, இந்தியா நாடுகள் வெளிவிவகார கொள்கைகளுக்கமைய உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்கா, இந்தியாவுடன் அண்மைக் காலமாக நட்புணர்வைப் பேணி வருகிறது. இலங்கை நிலவரம் குறித்தும் நாம் அவதானித்து வருகிறோம்.

யுத்தகாலத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்கி உதவிய அமெரிக்கா, யுத்தத்தின் பின்னர் வடபகுதியில் மீள் குடியேற்றப்படும் மக்களின் நலன்கருதி பல வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை நிலவரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பிரீஸ் மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வெற்றி அளித்துள்ளது.

இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளமை வரவேற்கதக்கதாகும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக