டுபாய் நீதிமன்றத்தில், 26 வயதான இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காதலியின் கணவரை படுகொலை செய்த குற்றத்திற்காகவே சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலனை செய்த நீதவான்கள் ஆயுள் தண்டனையை ரத்து செய்து மரண தண்டனை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டுபாய் மேன்முறையீட்டு நீதவான் எய்சா சாரீப் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆபிரிக்க வாசி ஒருவர் தமது கணவரைப் படுகொலை செய்ததாகக் கொலையுண்டவரின் மனைவி முதலில் வாக்கு மூலம் அளித்திருந்தார். எனினும், தீவிர விசாரணைகளின் பின்னர் தமது காதலரே கணவரை படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த டக்ஸி சாரதி ஒருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்ட, கொலையுண்ட இலங்கையர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக