3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இலங்கைத் தூதரகம் நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வைகோவுடன் பேரணியில் ஈடுபட்ட நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன், டி.ராஜேந்திர், மகேந்திரன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரித்த சிவசேனா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோன்று, கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 75க்கும் மேற்பட்டோரைப் பொலிஸார் கைது செய்தனர்.
கோவை ரெட் க்ரொஸ் பகுதியில் ஜனாதிபதிக்குக் கருப்பு கொடி காட்ட முயன்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . கிருஷ்ணசாமி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
காந்திபுரத்தில் எதிர்ப்புத் தெரிவித்த ம.தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அனுமன் சேவா கட்சியினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திப் பொலிசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக