26 பிப்ரவரி, 2010

ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ மலையகத்திற்கு விஜயம்

இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் பிரஜாசக்தி அமைப்புடன் இணைந்து கடந்த வருடம் நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்திய வெசாக்கூடு தயாரித்தல் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலைகளுக்கும் பரிசளிக்கும் நிகழ்வு ஹட்டனில் நடைபெறது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டானின் அழைப்பின் பேரில் உலங்கு வானூர்தியில் ஹட்டனுக்கு விஜயம் செய்த ஷிராந்தி ராஜபக்ஷ, மலையகத் தமிழ்-சிங்கள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார்.

அத்துடன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து பரிசுப் பொருட்களையும் வழங்கினார். இவரின் வரவைத் தொடர்ந்து ஹட்டன் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக