26 பிப்ரவரி, 2010

பார்லிமென்ட் தேர்தலில் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ஜனநாயகதேசிய கூட்டணிக்கு தலைமையேற்பார்.

Top global news update
பார்லிமென்ட் தேர்தலில் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ஜனநாயக தேசிய கூட்டணிக்கு தலைமையேற்பார். அவரது மனைவி அனோமா, இந்த கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் பிரசாரம் செய்வார்' என, ஜே.வி.பி., கட்சி தெரிவித்துள்ளது.


இலங்கை பார்லிமென்ட் தேர்தல் வரும் ஏப்ரலில் நடக்கிறது. இதில், முக்கிய எதிர்க்கட்சியான ஜே.வி.பி., சார்பில், ஜனநாயக தேசிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் ராணுவத் தளபதியும், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளவருமான சரத் பொன்சேகா போட்டியிடுகிறார். இதுகுறித்து ஜே.வி.பி.,யின் மூத்த தலைவர் சோமவன்சா அமரசிங்கே கூறியதாவது:


எங்கள் கூட்டணி சார்பில், கொழும்பு தொகுதியில் இருந்து சரத் பொன்சேகா போட்டியிடுகிறார். எங்கள் கூட்டணிக்கு அவர் தலைமையேற்பார். வேட்பு மனுவில் அவரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.அவர், காவலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை தலைமையகத்துக்கு சென்ற வக்கீல், இந்த கையெழுத்தை அவரிடம் இருந்து பெற்றார். சரத் பொன்சேகாவின் மனு, நாளை (இன்று) முறைப்படி தாக்கல் செய்யப்படும்.


கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பொன்சேகாவின் மனைவி அனோமா, நாடு முழுவதும் பிரசாரம் செய்வார்.இவ்வாறு சோமவன்சா அமரசிங்கே கூறினார். இதற்கிடையே,"அரசுக்கு எதிராக சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக் காக, பொன்சேகாவுக்கு எதிராக இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என, இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் பெரிஸ் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக