புதிய மின் உற்பத்தி நிலையங்களின் பலாபலன்:
மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைக்க நடவடிக்கை - ஜனாதிபதி

புதிய மின்னுற்பத்தி நிலையங்களின் பலாபலன்கள் மக்களைச் சென்றடையும் வகையில் மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
வத்தளை, கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இம்மின் நிலையத்தின் இரண்டாம் கட்டம் திறக்கப்பட்டதுடன் நூறு மெகா வார்ட் மின்சாரம் தேசிய மின்னுற்பத்தியில் சேர்க்கப்படுகின்றது.
அதேநேரம் இம்மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம் கட்டம் ஏற்கனவே திறக்கப்பட்டதை தொடர்ந்து 200 மெகா வார்ட் மின்சாரம் தேசிய மின்னுற்பத்தியில் சேர்க்கப்பட்டது.
மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய 294.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இம் மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்ப ட்டுள்ளது.
இம்மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டத்தை நேற்று வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
பெற்றோலியப் பொருட்களைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வது அதிக செலவு மிக்க பணியாகும். அத னால் இலாபகரமான மாற்று வழிகளை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். இதன் பயனாக கெரவலப்பிட்டியவில் உலை எண்ணெயைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யும் நிலையம் அமைக் கப்பட்டு இப்போது திறந்து வைக்கப்பட்டி ருக்கின்றது. இதில் நூறு மெகா வார்ட் மின்சாரம் எண்ணெய் இல்லாமல் உற் பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்னுற்பத்தி நிலையமும், மேல் கொத்மலை நீர்மின்னுற் பத்தி நிலையமும் நிர்மாணிக்கப்படுகின்றது.
இருப்பினும் எம் முன்பாக இருக்கும் அடுத்த பிரச்சினை மின் கட்டணமாகும். அதனால் மின் நுகர்வோர் செலுத்துகின்ற கட்டணத்தை கூடிய கதியில் குறைப்பதே எமது அடுத்த பணியாகும். மின்னுற்பத்திச் செலவு குறைந்துள்ளது. ஆகவே நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணமும் குறைய வேண்டும். அதற்காக நாம் இப்போது செயற்படுகின்றோம். இந்த உற்பத்தி தேசிய கட்டமைப்பில் சேரும்போது அதன் நன் மையை நுகர்வோருக்குப் பெற்றுக் கொடுக் கும் பொறுப்பு எம்முடையதே என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக