ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக புகார் துருக்கி ராணுவ உயர் அதிகாரிகள்கைது
அங்காரா:துருக்கியில் அரசுக்கு எதிராக ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக ராணுவ தளபதி உட்பட 12 அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.துருக்கி மதசார்பற்ற நாடு. ஆனால், அரசு மதசார்புள்ளதாக உள்ளது.இந்த நாட்டு ராணுவம் மதசார்பற்ற முறையில் செயல்படுகிறது.
இந்த விஷயத்தில் அரசுக்கும், ராணுவத்துக்கும் நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது.பிரதமர் ரெசப் தயீப் எர்டோகன் தலைமையிலான அரசை கவிழ்க்க முயன்றதாக கூறி ராணுவ தளபதி, விமானப்படை தளபதி என 50 அதிகாரிகள் கடந்த 22ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், ராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள் உட்பட 12 அதிகாரிகளை சிறையில் அடைக்க துருக்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடக்கும் இந்த பூசலால், பங்குச் சந்தை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக