27 அக்டோபர், 2009

சென்னை விமான நிலையத்தில் வைத்து மூன்று இலங்கையர்கள் கைது-
செட்டிகுளம் முகாமிலிருந்த மன்னாரைச் சேர்ந்த 52குடும்பங்கள் அனுப்பிவைப்பு-

வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நேற்று மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 52 குடும்பங்களைச் சேர்ந்த 147பேர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலுப்பைக்குளம் அழைத்துச் செல்லப்பட்டுள்ள மக்களில் இதுவரை 1500ற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் வைத்து மூன்று இலங்கையர்கள் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் போலிக் கடவுச்சீட்டுடன் கொழும்பு செல்லும் விமானமொன்றில் பயணிப்பதற்கு முயற்சித்த வேளையிலேயே தமிழகம் கியூபிரிவு பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபிரிவு பொலீசார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக