27 அக்டோபர், 2009

யுத்தத்தின் பின் இலங்கை நிலவரம் : ஐரோப்பிய ஒன்றியம் ஆராயும்


மேனிக்பாமிளிருன்ட்னிக்பாமிலிருந்து 147 பேர் மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றம்



பின்னரான இலங்கை நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 29,30ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடு நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

காலநிலை மாற்றம், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகப் பிரச்சிகைள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஈரான், பொஸ்னியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலவரம் குறித்தும் இலங்கை யுத்தத்தின் பின்னரான நிலவரம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத வரையிலும் இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைக் கோர முடியாது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கை விவகாரப் பொறுப்பாளர் பெர்னார்ட் செவாஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித உரிமை மீறல் விசாரணை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத நிலையில் சலுகைத் திட்டங்களை இலங்கை கோரக் கூடாது.

ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் வழங்கும் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகள் காணப்படுகிறது.

சலுகைத் திட்டத்தை வழங்க வேண்டுமாயின் விசாரணை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான பின்னணியில் சலுகைத் திட்டத்தை நீடிக்குமாறு கோரும் எந்தவொரு உரிமையும் இலங்கைக்கு இல்லை.

இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் சலுகைத் திட்டம் தேவையில்லை என எந்த நேரத்திலும் இலங்கை அறிவிக்க முடியும்.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பில் நன்கு அறிந்து கொண்டதன் பின்னரே இலங்கை இந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தது.

ஐரோப்பிய ஒன்றிய சட்டதிட்டங்களைப் பின்பற்றும் நாடுகள் மட்டுமே இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். பேச்சுவார்த்தைகளின் மூலம் சமரசம் செய்து கொள்ள முடியாது." என்றார்


மெனிக்பாம் நலன்புரி நிலைஅயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நேற்று மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தவர்களில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நலன்புரி நிலையத்திர்கு அழைத்து வரப்பட்ட மக்களில் இதுவரை 1500 இற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக