14.11.09
நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அதிசய நாக சிலை! மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிவேம்பு எனும் கிராமத்தில் நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் (10.11.2009) மாலை 4.00 மணியளவில் ஓர் அதிசயம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியாக மனித உருவில் தோன்றிய நாகபூசணி அம்பாள் ஏனைய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியதாகவும் பின்னர் பெரியோர் அவதானித்ததும் ஆலமரத்திற்கு கீழே சென்று, நாகத்தின் உருவில் சிலையாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. பி.ப. 5.00 மணிவரையும் அச்சிலைக்கு இதயத்துடிப்பு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதன் வால்பகுதி மரத்தில் உள்நுழைந்திருப்பதுடன் வெளியே தலைப்பகுதி மாத்திரம் காணப்படுகின்றது. நேற்றிலிருந்து பலர் புதிதாகத் தோன்றிய இந்தச் சிலையைப் பார்வையிட்டு வருகின்றார்கள்.

போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : ஐ.தே.முன்னணிக்கு மல்வத்த பீடாதிபதி அறிவுரை
"மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு ஆசி வழங்கிய கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியினர் தமது கொள்கை விளக்கக் கோவையினை மல்வத்த பீடாதிபதியிடம் இன்று சனிக்கிழமை காலை கையளித்து ஆசிபெற்ற பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து கொழும்பிலிருந்து வாகனத் தொடரணியாக கண்டிக்குச் சென்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
"மாகாண சபைகளினூடாக மக்களுக்கு உரிய சேவைகள் ஆற்றப்படுவதில்லை என்பதே எனது கருத்தாகும். நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரமில்லாத மக்கள் பலம் கொண்ட ஆட்சி பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எனது சொந்த அபிப்பிராயமாகும்.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்" என பீடாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
"நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமில்லை. பொருளாதாரம் நாளுக்கு நாள் அபிவிருத்தியில் குறைந்து வருகிறது. சுதந்திரமான ஜனநாயக நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே நாம் ஒன்றிணைந்தோம்.
நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம்" என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
கொழும்பிலிருந்து தொடரணியாகச் சென்ற மேற்படி குழுவினர், இன்று காலை 9.00 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மல்வத்த பீடத்துக்குச் சென்றனர்.
கண்டி செல்வ விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதோடு கண்டி மீரா மக்காம் முஸ்லிம் பள்ளிவாசல், கண்டி மறைமாவட்ட ஆயர் இல்லம் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று அவர்கள் வழிபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில தங்கம் கடத்த முயன்றவர் கைது
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தப்பிச் செல்ல முயன்ற 45 வயதான இந்தியப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த விமானம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தரையிறங்கியவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதைக் கண்ட அதிகாரிகள் அந்நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அவரிடம் சுமார் 1 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக சந்தேக நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன் தப்பிச்செல்லவும் முயன்றுள்ளார்.
இவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்குவா தெரிவித்தார்.
சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த விமானம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தரையிறங்கியவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதைக் கண்ட அதிகாரிகள் அந்நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அவரிடம் சுமார் 1 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக சந்தேக நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன் தப்பிச்செல்லவும் முயன்றுள்ளார்.
இவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்குவா தெரிவித்தார்.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில தங்கம் கடத்த முயன்றவர் கைது
இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தப்பிச் செல்ல முயன்ற 45 வயதான இந்தியப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த விமானம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தரையிறங்கியவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதைக் கண்ட அதிகாரிகள் அந்நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அவரிடம் சுமார் 1 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக சந்தேக நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன் தப்பிச்செல்லவும் முயன்றுள்ளார்.
இவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்குவா தெரிவித்தார்.
சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த விமானம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தரையிறங்கியவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதைக் கண்ட அதிகாரிகள் அந்நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அவரிடம் சுமார் 1 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக சந்தேக நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன் தப்பிச்செல்லவும் முயன்றுள்ளார்.
இவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்குவா தெரிவித்தார்.
கடிதம் பகிரங்கமானது நெறிமுறைகளுக்கு முரண்-அமைச்சர் சமரசிங்க
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதம் கிடைத்துள்ளது. சீருடையில் எழுதியிருக்கின்ற கடிதத்தை ஜனாதிபதி வெளியிட்டிருக்கமாட்டார். அந்தக் கடிதத்தை ஜெனரல் பகிரங்கப்படுத்தியிருந்தால் அது நேர்மையற்றது. நீதி நெறிமுறைகளுக்கு முரணானது என மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், ஜெனரல் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு பதிலளிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அக்கடிதம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு எனக்கு அதிகாரமும் இல்லை, அக்கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தால் அது நேர்மையற்றது.
கடிதத்தின் பிரதியொன்று என்னிடமும் இருக்கின்றது. எனினும் ஜனாதிபதி பதிலளித்ததன் பின்னரே கடிதம் தொடர்பில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்கமுடியும் என்றார்

20 வருடங்களுக்கு முன் கைதிகள் கொல்லப்பட்ட அதே தினத்தில் திட்டமிட்ட தாக்குதல் - இடதுசாரி முன்னணி கண்டனம்
இருபது வருடங்களுக்கு முன்பதாக அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்ட அதே தினமான நவம்பர் 13ஆம் திகதி (இன்று) நேற்று வெள்ளிக்கிழமையன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அதிகாரிகளால் மறைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
கொழும்பு வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது ஏதேச்சையாக நடைபெறவில்லை. நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கடமைபுரிந்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் தங்கியுள்ள சிறைக் கூடத்திற்கு சென்று மிகக் கேவலமான முறையில் நிந்தித்துள்ளனர். இவ்வாறு ஏன் எம்மை நிந்திக்கின்றீர்கள் எனக் கேள்வி கேட்ட போதே சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளாலும் பெரும்பான்மை இன கைதிகளாலும் தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இத் தாக்குதலில் 8 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நாட்டுக்குள்ளும் பாதுகாப்பில்லை; சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது.1970 1980 களில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இன்று ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது. என்ன காரணம்? வேறொன்றும் அல்ல தமிழர் என்பதே காரணமாகும். இருபது வருடங்களுக்கு முன்பதாக இதே தினத்தில் தான் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டனர் என்பதையும் இத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றும் சமல் ஜயநித்தி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக